Widget Recent Post No.

கருந்துளை பற்றி அறியாததும் அறிந்ததும் | BLACK HOLE


கருந்துளை பற்றி அறியாததும் அறிந்ததும்




Black Hole

Black Hole

Black Hole
உருவாவதன் காரணம் நட்சத்திரத்தின் இறுதி காலம் அதாவது ஆயுட்காலம் முடிந்தபின், அந்த நட்சத்திரத்தின் நிறை மற்றும் ஈர்ப்பு மாறாமல் சுருக்கப்படுவதால் கருந்துளை (Black Hole) உருவாக்கப்படுகிறது. இந்த Black Hole அனைத்து பிரபஞ்சத்தின் நடுவிலும் இருப்பதாகவும், இந்த Black Hole தான் பிரபஞ்சத்தினை இயக்கிக் கொண்டிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்களால் கருதப்படுகிறது.

Black Holeன் உட்புறத்தில் Event Horizon என்ற ஒரு வளையம் உள்ளது. இந்த Event Horizon வெளியே இருந்து ஈர்க்கும் ஒளியும், பொருளும் எவையாகினும் இந்த Event Horizonஐ தாண்டி உள் கொண்டு செல்லாது. Black Holeல் ஈர்க்கும் தன்மை இருப்பதனால் ஒளியையும் தனக்கு அருகிலுள்ள பொருளையும் ஈர்த்துக் கொள்ளும். பூமியில் உள்ள புவிஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு செல்வதற்கு 11.2Km/s வேகத்தில் சென்றால் பூமியை விட்டு விலக முடியும்.

ஒளியின் வேகம் 3x10^8 m/s வேகத்தில் செல்லும் ஒளியைக்கூட BlackHoleல் இருந்து வெளியே வர இயலாது என்பதனால் அதினுள் சென்ற எவையும் மீண்டு வர இயலாது. Interstellar என்ற திரைப்படம் Black Holeஐ பற்றி வெளிக்காட்டி எடுத்த திரைப்படம். இதன்பிறகு Black Holeஐ பற்றி அனைவரும் பேச தொடங்கினர். அறிவியலாளர் ஒருவர் விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு கோள் மற்றொன்றை சுற்றி வருவதை கண்டறிந்தார்.

நிறையும் ஈர்ப்புத் தன்மையும் அதிகமுள்ளவைகளை தான் கோள்கள் சுற்றி வரும் என்பதை அறிவியலில் நாம் அறிந்த ஒன்று. அந்த கோள் Black Holeஐ  சுற்றி வருகிறது என்பதை அன்று தான் கண்டறிந்தனர். Black Holeல் ஈர்க்கப்படும் அனைத்தும் கரும்பு எந்திரத்தில் இருந்து வெளிப்படும் சக்கை போலும், Noodles போன்றும் ஈர்க்கப்படும். இதனுள் மனிதன் சென்றால் மரணம் தான்.

Black Holeல் நேரம் மெதுவாக செல்லும் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதனால்தான் Time Travelம் சாத்தியம் என்று நம்பப்படுகிறது. அனைத்திற்கும் ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு முற்றிலும் இருக்கும் என்பது மரபு. எனவே Black Holeக்கும் முடிவு உண்டு. அதற்கு முடிவினை  கண்டறிந்தவர் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங்(Stephen Hawking).

இவர் "Black Holeனால் ஈர்க்கப்படும் ஒளிகளிலிருந்து  Radiation வெளிப்படும் மற்றும் இந்த Radiation வெளிப்படுவதினால் Black Holeன் நிறை குறைந்து வரும். இவ்வாறு Black Holeன் நிறை குறைந்து கொண்டே இருந்தால் முற்றிலுமாக Black Hole மறைந்து விடும். இது தான் Black Holeன் முடிவு நிலை ஆகும்" என்று அறிவியலாளர்  ஸ்டீபன் ஹாவ்கிங் கருதினார். இவர் கூறியதனால் அந்த Radiationக்கு Hawking Radiation என்று பெயர் வைக்கப்பட்டது.

Black Holeஐ  நமது கண்ணால் காண இயலாது இருப்பினும்  Black Holeஐ புகைப்படம் எடுத்து இன்று நாம் அனைவரும் வலைத்தளங்களில் காண்கிறோம். வரும்காலத்தில் Black Holeஐ பற்றி அறியாத பல விவரங்களும் வெளிப்படும் மற்றும் Time Travelம் சாத்தியமாக்கப்படும் என கருதப்படுகிறது. இது போன்று சுவாரஸ்யமான அறியாத விஷயங்களை பெற்றுள்ளது இந்த Black Hole. 

Post a Comment

0 Comments