Widget Recent Post No.

நடிகர் அஜித் பற்றி அறியாததும் அறிந்ததும் | THALA AJITH


நடிகர் அஜித் பற்றி அறியாததும் அறிந்ததும் 


thala ajith wallpaper

THALA AJITH


அஜித் குமார் என்னும் தல அஜித் மற்றும் இவருக்கு "அல்டிமேட் ஸ்டார்" என்னும் பெயரும் உண்டு. ஆந்திரப்பிரதேசத்தில் ஹைதராபாத் நகரத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து வந்தார். 
தனது பள்ளிப்படிப்பை 10ஆம் வகுப்பில் முடித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்கிறார். இவர் சிறு வயதிலிருந்தே "கார் ரேஸ்","பைக் ரேஸ்" ஆகியன பார்த்து வளர்ந்து வந்தவர்.இதனால் அவர் ஒரு கார் ரேஸராக திகழ வேண்டும் என எண்ணினார். பின் ஒரு டெக்ஸ்டைல் போன்ற நிறுவனத்தில் பணி புரிகிறார். 

அங்கு வந்த P.C.ஸ்ரீராம் என்பவர் தல அஜித்தை மாடலிங் செய்ய அழைக்கிறார். பணம் வருமானித்து ரேஸில் கலந்து கொள்வதற்காக மாடலிங் செய்து வருகிறார். சில விளம்பரங்களிலும், சிறு திரைக்கதைகளிலும் நடிக்கிறார். தெலுங்கு படத்தில் நடிக்க அஜித்திற்கு வாய்ப்பு கிடைக்கிறது, பாதி படம் நடித்த பிறகு அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் இறந்து விடுகிறார். அன்று முதல் தோல்வியை சந்தித்தார் தல அஜித். பிறகு S.P.B மூலமாக அறிமுகமாகிறார்.  1993ல்  "பிரேம புஸ்தகம்"
என்ற தெலுங்கு  திரைப்படத்திலும் நடித்துள்ளார் தல அஜித். 

மேலும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு கார் ரேஸில் கலந்து கொள்கிறார்.பின் ஒரு ரேஸில் அவருக்கு விபத்து ஏற்படுகிறது.இதன் பிறகு கதாநாயகனாக திகழ முடியாது, Unlucky Actor என்று கூறியவர்களின்  மத்தியில் தன்னம்பிக்கை கொண்டு மேலும் திரைப்படங்களில் நடிக்கிறார். பிறகு பில்லா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுகிறது. "காதல் மன்னன்","காதல் கோட்டை","ஆசை" போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து வந்ததால் பெண் ரசிகைகள் அதிகமாகின. 

"அட்டகாசம்" படத்தில் "தல போல வருமா" என்ற பாடலினால் அவருக்கு "தல" என்ற பெயர் ரசிகர்களின் முன் பரவத்தொடங்கியது. தனக்கு பிடித்தமான செயல்களை செய்து தனக்கு பிடித்த படி வாழ்ந்து வந்தார். இவர் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது  இவரது தன்னம்பிக்கையும், தைரியமும், துணிவும் தான். இந்த குணங்கள் யாவும் ரசிகர்களை ஈர்க்கச்செய்தது. 1993ல் இருந்து 2021 வரை 58 திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பல்வேறு இயற்க்கை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கும் நற்குணம் கொண்டவர் தல அஜித். இவரின் புன்னகை சிரிப்பும், நடிப்பு திறமையும் இவரை பிரபலமான நட்சத்திரமாக உருவாக்கியுள்ளது. பல்வேறு தோல்விகளையும் துன்பங்களையும் நேர்கொண்டு தனது துணிவும், நம்பிக்கையும், தைரியமும் வைத்து இன்றைய மக்கள் மனதிலும், திரை உலகிலும் இடம் பிடித்துள்ளார் தல அஜித்.

Post a Comment

0 Comments