Widget Recent Post No.

நடிகர் விஜய் பற்றி அறியாததும் அறிந்ததும் | ILAYATHALAPATHY VIJAY


நடிகர் விஜய் பற்றி அறியாததும் அறிந்ததும் 


VIjay Photos

THALAPATHY VIJAY

ஜோசப் விஜய் என்னும் தளபதி  விஜய், கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் "நாளைய தீர்ப்பு". தனது ஆரம்ப கால திரைப்படங்களில் ஒரு கதாநாயகனாகனுக்கான முகமும், உடல் வளமும் இல்லை என்று ஒதுக்கப்பட்டாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் புறக்கணித்து தனது திரைப்படங்களில் நடித்து வந்தார் விஜய்.

தனது தந்தை, பிரபலமான இயக்குனர் S.A.சந்திரசேகர் வழியாக திரை உலகிற்கு அறிமுகமான இவர் தனது நடிப்பு திறமையின் உழைப்பால் இன்றைய மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பு திறமையோடு மட்டுமல்லாமல் பாடல், நடனம் மற்றும் நகைச்சுவை தன்மையும் மக்களுக்கு பிடிக்க காரணம் ஆகும்.

இவரது நடிப்பு, பாட்டு, நடனம் ஆகியவற்றிற்கு ஒரு ரசிக கூட்டமே உள்ளது. இவருக்கு தமிழ் நாட்டில் மட்டும் ரசிகர் இல்லாமல்  மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் ரசிக கூட்டம் திரண்டுள்ளது. இவர் தென்னிந்திய அளவில் பிரபலமான ஒருவர் ஆவார்.தளபதி விஜய் பிரபலமாக இருக்க காரணம் நடிப்பு, பாட்டு, நடனம் ஆகியவற்றை ரசித்து செய்வதனால் மக்கள் அனைவரும் ரசித்து பார்க்கின்றனர்.

1984ல் இருந்து 2021 வரை 64 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு "குட்டிக்கதை" சொல்லிவிட்டு செல்வார். இந்த "குட்டிக்கதை" என்று தளபதி சொல்லும் வார்த்தை "Kutty Story" என்ற  தலைப்பில் பாடல் ஒன்று மாஸ்டர் திரைப்படத்தில்வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆகி உள்ளது.

அனைவரிடமும் நன்றாக பழகுவதும், பணிவுடனும், அமைதியாகவும் இருப்பதே இவரின் உயர்விற்கு காரணம் ஆகும். இவர் ஒரு இசை வெளியீட்டு விழாவில் "எனது பேனரையும், போஸ்டரையும்  வேண்டுமானால் கிழித்து கொள்ளுங்கள், ஆனால் எனது ரசிகர்களை ஏதும் செய்யாதீர்கள்" என்ற சொல் இவரின் ரசிகர்களை மேலும் ஈர்க்கச் செய்தது.

ஆரம்ப காலத்தில் தன்னை வெறுத்தாலும் தனது விடாமுயற்சியுடன் திரைப்படத்தில் நடித்து இன்று பிரபலமான நட்சத்திரமாக திகழ்கிறார் நடிகர் விஜய்.

Post a Comment

0 Comments