மதன் கௌரி பற்றி அறியாததும் அறிந்ததும்


Madan gowri Youtube channel

MADAN GOWRI



Youtuber மதன் கௌரி. இவர் மதுரை நகரத்தில் பிறந்தார். இவர் MBA முடித்து விட்டு மெக்கானிக் இன்ஜினீயர் ஆக IT நிறுவனத்தில் பணி புரிந்தார்.இவர் Middle Bencher Student, இவருக்கு ஆடல், பாடல் இவைகளை தவிர்த்து பேச்சுத் திறமை இருந்தது. இவரின்  பேச்சுத்திறமையை கண்டு அனைவரும் "நன்றாக பேசுகிறார்" என்று கூறியுள்ளார். Facebookல் தனியாக Page உருவாக்கி அதில் மீம்ஸ் மற்றும் வீடியோக்களை போஸ்ட் செய்து வந்தார். 33,000 FollowersFacebook Page ல் கொண்டிருந்தார்.

அவரது Facebook Pageல் Copyright வந்ததால் அவரது Facebook Page நீக்கப்பட்டது. மதன் கௌரி அதிர்ச்சியுடனும் சோகமாகவும் இருந்தார், "இத்தனை Followers மீண்டும் எப்படி திரட்டுவது" என்று எண்ணினார். தனக்கு பிடித்த ஒருவரிடம் சண்டை போட்டு கொண்டதினால், அவரிடம் பேசுவதற்காக பல Social Mediaல் முயற்சி செய்தார். பிறகு Youtube வழியாக ஒரு வீடியோ உருவாக்கி அதன் மூலம் பேசலாம் என்று முயற்சித்து வீடியோ உருவாக்கினார். 

பிறகு Facebookல் பேச்சுத்திறமையை வீடியோவாக உருவாக்கி கொண்டிருந்த அதே பணியை Youtubeலும் தொடங்கினர், தொடர்ச்சியாக போஸ்ட் போட்டு கொண்டிருந்தார். அவருக்கு 10 Subscribers இருந்தன, பார்வைகள் (views) குறைவாக இருந்ததனால் இனி வீடியோ போடுவதை நிறுத்தி விடலாம் என்று எண்ணிய நிலையில், ஒரு subscriber அவரது Comment boxல் "நீங்கள் ஏன் நேற்று வீடியோ போடவில்லை ? நான் தினமும் உங்களது வீடியோக்களை பார்க்கிறேன்" என்று கூறி இருந்தார். 

அந்த Commentஐ பார்த்த மதன் கௌரி, அந்த subscriber கூறிய வார்த்தைக்காக மீண்டும் வீடியோ போட ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை  தொடர்ச்சியாக வீடியோ உருவாக்கியதனால், மதன் கௌரி Youtube Channelல் 10 Subscriberல் இருந்து 50 லட்சம் Subscribers வரை வந்துள்ளனர். 

இவர் Motivation Speaker ஆகவும் கருதபடுகிறார். இவர் Wikipediaவின் மற்றொரு அவதாரம் என்றும் கூறலாம். இவருக்கு Blacksheep Digital Award 2021ல்  "The Best Digital Content Creater" என்னும் விருதை வழங்கியுள்ளது. 

இவர் எந்த தலைப்பாக இருந்தாலும் அதனை 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பேசும் திறமை மிக்கவர். பலரும் பேசாத தலைப்புகளும் சிலர் கூச்சப்படும் தலைப்புகளும் போன்ற அனைத்து தலைப்புகளையும் மக்களுக்கு புரிய கூடிய வகையில் எடுத்துரைப்பார். "பூமி" திரைப்படத்தில் மதன் கௌரி Youtube Channelல் ஒரு வீடியோவை நடிகை பார்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. 

வாரம் ஒரு முறை Youtubeல் Live வந்து Subscribers கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். இவருக்கு பெண் ரசிகைகளும் இருக்கின்றன என்பது பற்றி சிலருக்கு தெரியாத ஒரு விஷயமாகும். இவர் Youtubeல்  05 டிசம்பர் 2013ல் இருந்து 10 ஜூன் 2021 வரை 1420 வீடியோக்களை உருவாக்கியுள்ளார்.

வெள்ளித்திரையில் விஜய்,அஜித் போன்ற நடிகர்கள்  வந்தால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவது போல், இவர் "HELLO EVERYONE நான் மதன் கௌரி" என்று சொன்னாலே ரசிகர்களின் மனதில் உற்சாகம் ஏற்படும்.

இவரது Facebook Pageல் 33,000 Followersஐ  இந்த Youtube channelல் கடந்து வரவேண்டும் என்று விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் வீடியோ  போட்டு வந்ததால், இன்று 5 மில்லியன் ஆதரவுகள் (subscribers) உள்ளனர். இதனை இவர் subscribers என்று கூறாமல் Friends என்றும்  கூறுவார். இவர் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

இவர் சில கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். சிலர் அறியாத விஷயங்களை மக்களிடம் புரியும்படி விளக்கம் அளிப்பார். தனது பேச்சுத்திறமையை வெளிக்காட்ட Youtube தளத்தை தேர்ந்தெடுத்து இன்று பிரபலமான Youtuberஆக இருக்கிறார் மதன் கௌரி.