Widget Recent Post No.

புகழ் பற்றி அறியாததும் அறிந்ததும் | VIJAY TV PUGAZH


புகழ் பற்றி அறியாததும் அறிந்ததும்


Vijay Tv Pugazh

PUGAZH



விஜய் டிவி புகழ் மற்றும் குக் வித் கோமாளி புகழ் என்று அழைக்கப்படும் புகழ், கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் ஏழ்மை குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். இவரது தந்தை பழக்கடை வைத்துள்ளார்.இவரது தாயார் செய்யும் "அதிரசம்" போன்ற இனிப்பு பலகாரங்களை விற்று பணம் வருமானித்து வருவார். இவர் பெட்டி கடையில் பணி புரிந்தார். பிறகு இவரது தந்தை "நீ கடலூரில் பணி புரிவதை விட்டு சென்னைக்கு சென்று வேலை செய்" என்று கூறினார்.

தனது அண்ணனும் சென்னையில் வேலை செய்து கொண்டிருப்பதால், "அவரிடம் வேலை ஏதாவது கேட்டு பாப்போம்" என்று எண்ணினார். செலவிற்காக வீட்டில் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னைக்கு சென்று தன் அண்ணனை சந்தித்து வேலை கேட்கிறார். அவரது அண்ணன் "Airtel கம்பெனியில் வேலை இருக்கிறது அங்கு சென்று வேலை  செய், நல்ல வருமானம் கிடைக்கும்" என்று அண்ணண் கூறியதை கேட்டு Airtel கம்பனிக்கு செல்கிறார்.

அங்கு ஒருவரிடம் புகழ் வேலையை கேட்கிறார். அவர் "இங்கு வேலை செய்ய ஒரு செல்போன் தேவை என்று கூறியதும் ஒரு செல்போன் வாங்கி வருகிறார். பிறகு செல்போன் புகழிடம் இருந்து பெற்று கொண்டு புகழை ஏமாற்றிவிடுகிறார். இதனால் புகழ் கடுங்கோவத்துடனும், சோகத்துடனும் இருந்தார். அவரது அண்ணண் "வேலை கிடைத்ததா?" என்று கேட்கிறார்."நான் ஏமாந்து விட்டேன்" என்று கூறினார். அவரது அண்ணன் ஆறுதல் கூறுகிறார்.

பிறகு "வெல்டிங் வேலை"யில் பணி புரிகிறார் புகழ். வெல்டிங் வேலை செய்து கண்கள் இரண்டும் எரிச்சல் ஏற்பட்டு, வாழைப்பழத்தோலினை கண்களில் போட்டுக்கொண்டு இரவு தூங்குவார். பிறகு "அட்டை  ஒட்டும்  வேலை", "கார் துடைக்கும் வேலை ", "பெயிண்ட் அடிக்கும் வேலை" போன்ற கிடைத்த வேலைகள் அனைத்தும் செய்து வந்தார். 

அங்கு "பாணா காத்தாடி" திரைபடத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நடிகர், புகழை பார்த்து "உனக்கு நகைச்சுவை தன்மை கொண்ட முகம் உள்ளது, நீ வேண்டுமானால் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்" என்று கூறினார். புகழும் அதைக்கேட்டு கலந்து கொள்கிறார். அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நிராகரிக்கப்படுகிறார் (Rejected). பிறகு இரண்டாவது முறையாக கலந்தும் நிராகரிக்கப்படுகிறார்.

பின் "KPY தீனா" பழக்கம் ஆனார். அவருடன் சேர்ந்து "சிரிப்பு டா" நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின் "அது இது எது" நிகழ்ச்சியில் பெண் வேஷம்(Lady Getup) போட்டு நடிக்கிறார். பெண் வேடத்தில் நடித்தது, சிறிது பிரபலம் ஆகிறது. அதற்கு பிறகு "Super Singer"ல் அந்நியன் Concept செய்து அதில் மக்களுக்கு பிடித்த நபராக திகழ்கிறார். ஒருவருடன் சேர்ந்து கொண்டு நகைச்சுவையை வெளிக்காட்டியதால் இவரது நகைச்சுவை திறமை வெளிப்படவில்லை. 

Cook With Comali நிகழ்ச்சியில் புகழை அழைத்தனர். இதில் இவர் தனியாக தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியதால்,புகழும் Cook with Comali நிகழ்ச்சியும் பிரபலமாக ஆரம்பித்தன. இவருக்கு சில பட வாய்ப்புகளும் வரத்தொடங்கின. Cook With Comali Season 2ல் முன்பைவிட அதிகமாக மக்களை சிரிக்க வைத்து, மேலும் பிரபலமாக மாறினார். Cook With Comali Season 1 ஐ விட  Cook With Comali Season 2 மாபெரும்  ஹிட்  அடித்துள்ளது. இதுவரை புகழ் ஒன்பது திரைப்படங்களில் நடிப்பதாக கூறியுள்ளார். 

இவர் அனைத்து Interviewவிலும்  "பெருமையும்,பாராட்டும், புகழும் தலைக்குக்கீழ் வரை எடுத்துக் கொள்ள வேண்டும், தலைக்கு மேல் எடுத்துக் கொண்டு தலைக்கணம் கொள்ளக்கூடாது" என்ற கருத்தை மக்களிடம் கூறி, தானும் பின்பற்றி வருகிறார். இவர் "Youtube"ல் மக்களை சிரிக்க வைக்க வீடியோ உருவாக்கி வருகிறார், அதில் 11 லட்சம் Subscribers உள்ளனர். 

இவருக்கு "Black Sheep Digital Award 2021" புகழுக்கு "The Entertaining Star Pugazh என்ற விருதையும், "Vijay Television Award 2021" புகழுக்கு "Favourite Comedian" விருதையும் வழங்கியுள்ளது.

இவர் கடினப்பட்டு உழைத்ததும், வாய்ப்புகளை தவரவிடாமலும் இருந்தது தான் இவரின் வெற்றிக்கும், உயர்விற்கும் காரணம்  ஆகும். மேலும் மேலும் சிரிக்க வைத்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் புகழ்.   

Post a Comment

0 Comments